அன்பான வாசகர்களுக்கு ,
எங்களது blogger தங்களுக்கு மிக்க பயன் தரும் என்று நாங்கள் நம்புகின்றோம் .
கடந்த 15நாட்களாக inr மதிப்பு மிகவும் குறைந்து கொண்டு செல்கின்றது ,
இது அந்நிய நாட்டு நிதியை ஊக்குவித்து உள் நாட்டு சந்தையை சீர்குலைகின்றது .மேலும் பொருளாதாரம் மோசம் அடைந்து வருகின்றது .
சந்தையில் எதோ தவறு இருகின்றது என்று முதலீட்டார்கள் பேசிக்கொள்கின்றனர்.பொருளாதாரம் சரிவு சந்தித்து வருகின்றது. பணவீக்கம் அதிக அளவில் உள்ளது.
ருபாய் மதிப்பு வீழ்ச்சி தங்கம் மற்றும் வெள்ளி மதிப்பை மேல்நோக்கி கொண்டு செல்லபடுகின்ரது .
மேலும் inr -usd 70க்கு அதிமாக செல்ல வாய்ப்பு உள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றது .இந்த ருபாய் மதிப்பு உயர்வுக்கு பின் தங்கம் மற்றும் வெள்ளி புதிய வாழ்கை கிடைத்துவிட்டது .
பங்கு வர்த்தகம்
ஆகஸ்ட் 30,2013,01:59
பங்கு வர்த்தகத்தில் முன்னேற்றம்
மும்பை:பங்கு வர்த்தகம்,
வியாழக்கிழமையன்று ஓரளவிற்கு நன்கு இருந்தது. சாதகமான சர்வதேச நிலவரம், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் உயர்வு மற்றும் அன்னிய நிதி நிறுவனங்கள், பங்குகளில் அதிகளவில் முதலீடு மேற்கொண்டது போன்றவற்றால், "சென்செக்ஸ்' 2.25சதவீதம் ஏற்றத்துடன் முடிவுஅடைந்தது.
அமெரிக்க பொருளாதார வளர்ச்சி குறித்த எதிர்பார்ப்பால், ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச்சந்தைகளிலும், வர்த்தகம் சற்று சூடுபிடித்து காணப்பட்டது.நேற்றைய வியாபாரத்தில், அனைத்து துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளும், அதிக விலைக்கு கைமாறின. குறிப்பாக, எண்ணெய், எரிவாயு, உலோகம், பொறியியல், நுகர்பொருட்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு அதிக தேவை காணப்பட்டது.
மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 404.89 புள்ளிகள் அதிகரித்து, 18,401.04 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப் பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,455.66 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 18,071.22 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், சேசகோவா, ஹிண்டால்கோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட, 24 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், கோல் இந்தியா, டாட்டா பவர், இன்போசிஸ் உள்ளிட்ட, 6 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தன.
தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 124.05 புள்ளிகள் உயர்ந்து, 5,409.05 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 5,428.90 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,303 புள்ளிகள் வரையிலும் சென்றது.
|
|||||||||||||||||||||||||||||||||
No comments:
Post a Comment